அடுத்து நாம் காணவிருப்பது பெரியாழ்வாரின் கண்ணன் பற்றிய பிள்ளைத் தமிழ். என்ன இது திவ்விய பிரபந்தம் என்று கூறி பிள்ளைத் தமிழ் என கூறுவதில் சந்தேகமா? ஆம்
முதன்முதலில் தமிழுக்கு பிள்ளைத்தமிழை அறிமுகப்படுத்தியவர் பெரியாழ்வார்தான். கண்ணனின் அவதாரப்பெருமைகளை ஒரு தாய் எவ்வாறெல்லாம் விவரிப்பாளோ அவ்வாறெல்லாம் ஆழ்வார் விவரிப்பார். தன்னை கண்ணனின் தாயாக பாவித்து அவர் கூறும் ஒவ்வொரு திருமொழியும் இனிமையானவை.....இந்தப் பாடல்களை நாம் பாடும்போது நம்முள் அந்த தாய்மையுணர்வு பொங்குவது தெரியும்.......நமக்கே இப்படியென்றால் பெரியாழ்வாருக்கு எப்படியிருக்கும்.... சரி பாடலைப் பார்ப்போம்.............
முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
கலிவிருத்தம்
13
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்தளராயிற்றே.
முதல் பாடலை நாம் மாற்றிக் கூறுவோமானால் அர்த்தம் தானாக புரியும்., எப்படியென்றால், கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட, கண்ணன்
முற்றம் களந்தளறாயிற்றே வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர். கேசவன் என்ற திருநாமத்தையுடைய கண்ணன் பிறந்துவிட்டான் எங்கே அந்த ஆய்ப்பாடியில் செல்வசெழிப்பான நந்தகோபன் இல்லத்தில், அந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் ஆயர்கள் எதிரெதிர் சந்திக்கும்போது எண்ணெய்யுடன் சந்தனம் கலந்து ஒருவர்மேல் ஒருவர் தூவி,அந்த இடமே சேறு போல் ஆயிற்று (கண்நல் முற்றம் கலந்து அளறு ஆயிற்று) கண்நல் என்றால் அகன்ற பரந்திருக்கும், அளறு என்றால் சேறு, அதாவது அகன்று பரந்திருக்கும் முற்றம் எண்ணெயுடன் சந்தனம் கலந்து சேறாயிற்றே என்கிறார் இதெல்லாம் எங்கே என்றால் ஆய்ப்பாடியில் அன்றோ என்றால் அதுதான் இல்லை எங்கேயென்றால் வண்ண மாடங்கள் சூழ்ந்த திருக்கோட்டியூர் என்னும் திருத்தலமாம். ஆகா ஆழ்வாரின் தாய்மையுணர்வை பார்த்தீர்களா? கண்ணன் எங்கள் ஊரில் பிறந்துள்ளான் தனது மகனாக பிறந்துள்ளான் அதுவும் திருக்கோட்டியூர் என்னும் திருத்தலத்தில் என்கிறார்........
14
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றாய்ப்பாடியே.
கண்ணன் பிறந்துவிட்டான் எங்கள் கவலைகள் தீர்ந்துவிட்டன என்று ஆயர்கள் ஓடுவார், இடறி விழுவார்கள் உகந்தாலிப்பார் - ஆரவாரம் கொள்வார்., நாடுவார் நம்பிரான் எங்குதானென்பார், அட கண்ணன் எங்கேயுள்ளான் என்று நாடிச் செல்வார், பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று, கண்ணன் பிறந்துவிட்டான் என்று பாடுவோரும், பலதரப்பட்ட மேளங்களை வாசிப்போரும், ஆடுவார்களும் ஆயிற்றாய்ப்பாடியே., இப்படி ஆடிப்பாடி மேளம் கொட்டி ஒரே ஆரவாரமாகவிருந்தது ஆயர்ப்பாடியே என்கிறார். இங்கே ஆயர்ப்பாடியில் தான் இந்த ஆரவாரம் என்கிறார் ஆழ்வார்......
15
பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தான் உலகாளுமென்பார்களே.
பேணிச்சீருடைப் பிள்ளை பிறந்தினில்., பேணி - பாதுகாக்கப்பட்ட, அந்த கம்சனிடத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட எட்டாவது குழந்தையாம் கண்ணன், சீருடையப்பிள்ளைதான் இவன் என்று பிறந்த அன்று, காணத்தாம் புகுவார் புக்குப் போதுவார் - அந்த சீருடையப்பிள்ளையை காண்பதற்காகவே நந்தகோபன் அரண்மனைக்கு போவோரும் குழந்தையை கண்டுகளித்து வெளிவருபவரும், ஆணொப்பார் இவன் நேரில்லைகாண் - அட இவன்போல ஒரு ஆண் குழந்தை எங்குமே இல்லையப்பா என்று கூறுவோறும்...., திருவோணத்தான் உலகாளுமென்பார்களே - இங்கே ஒரு நிகழ்வைப் பாருங்கள் கண்ணன் பிறந்தது ரோகிணி நட்சத்திரத்தில், ஆனால் அவனைக் கண்டவர்கள் அவனை தங்களைக் காக்கும் பெருமானாக நினைத்து எம்பெருமானின் திருநட்சத்திரமான திருவோணத்தை மையப்படுத்தி, கண்ணனை திருவோணத்தான் உலக ஆள்வானே என்கிறார்கள் ஆயர்கள்.... ஆயர்களா இவ்வாறு உரைத்தார்கள் இல்லை நமது பெரியாழ்வார்........
16
உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே.
கண்ணன் பிறந்துவிட்டான் என்ற நற்செய்தியைக் கேட்டவுடன் ஆயர்கள் தாங்கள் வைத்திருந்த உறியை (அதாவது தயிர் வெண்ணெய் போன்றவற்றை வைக்கும் பொருள்) முற்றத்திற்கு உருட்டி தங்களது சந்தோஷத்தைக் கொண்டாடுவார்கள் வருகின்றவர்களுக்கெல்லாம் நறுநெய், பால் தயிர் எல்லாவற்றையும் மிச்சம் வைக்காமல் வருகின்றவர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள், செறிமென்கூந்தல் - நன்றாக செறிவாக கட்டப்பட்ட கூந்தல், அவிழதிளைத்து - அப்படி செறிவாகக் கட்டபட்ட கூந்தலை களைத்தனர் - எங்கும் அறவழிந்தனர் ஆயர்பாடியாரே - அவ்வாறு தாங்கள் அறிவிழந்து செயல்பட்டதை அறியாமல் ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் கண்ணனின் திருஅவதாரச்சிறப்பினை பலரும் அறியும் வண்ணம் பாடினர், பாடி மகிழ்ந்தனர்.............

Excellent Effort. You make everyone enjoy with saints' Tamil nector. I wish to taste, chew and digest in order to attain the eternal bliss. Continue with Lord's Blessings,Thiruvengadam.
பதிலளிநீக்குகருத்துரையிடுக