ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 16 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 7 – பகுதி 2


ஆனால் வஞ்சனை போய்விட்டது என்று நினைக்கிறீரா? விஷயத்தை மாற்றிவிட்டேன் வஞ்சனை அப்படியே இருக்கிறது. ஏற்கனவே வஞ்சித்த விஷயம் வேற. இப்ப வஞ்சிக்கிற விஷயம் வேற.

கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.       திருவாய்மொழி 5-1-1


போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மா நிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே           திருவாய்மொழி 5-1-2


யசோதை குழந்தைக் கண்ணனை தன் மடியில் வைத்துக் கொண்டு “தேனே, இன்னமுதே என்பொல்லா மணியே என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டு இப்படிச் செய்வாயா? மருதமரத்தின் இடையே போனாயே. வெயில் வீணாகப் போகாமல் எல்லாம் உன் தலையில் விழும்படி மாடு மேய்க்கப் போவாயோ” என்று உண்மையான ஆதுரத்துடன் சொல்லியிருப்பாள் அல்லவா?. அதை நான் நன்றாக காதில் வாங்கிகொண்டு அதே ஸப்தத்தை ஆதுரம் இல்லாமல் திரும்பச் சொன்னேன். ஊர் பார்த்து யசோதைக்கு கண்ணனிடம் இருக்கும் ஆதுரம் இவருக்கு கண்ணனிடம் இருக்கு பார்த்தாயோ. அப்படி எல்லோரும் ஏமாந்து போய்விட்டனர். இவர்கள் ஏமாந்தது போல் நீயும் ஏமாந்து நம்மாழ்வார் என்று பட்டத்தை வேறு கொடுத்து விட்டாய். இப்படித்தான் நான் ஊரை ஏமாத்திக் கொண்டிருக்கின்றேன். இப்படி நம்மாழ்வார் கிருஷ்ணன் விஷயத்தில் சொன்னதை மணவாளமாமுனிகள் ராமானுஜர் விஷயத்தில் விண்ணப்பிக்கிறார். 


ஈத்ருஷோSபி - இப்படிப்பட்டவனாய் இருக்கும் என்னை ஊர் என்ன சொல்கிறதாம் இப்ப? 


ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் – வேத வேதாந்தங்கள், இதிகாச புராணங்கள் இவைகள் எல்லாம் என்ன என்ன ஆத்ம குணங்கள், நல்ல குணங்களைச் சொல்கின்றனவோ, அத்தனை நல்ல குணங்களுக்கும் இருப்பிடம் மணவாளமுனியாகிய நான் என்று

இத்யாதரேண க்ருதிநோSபி – ரொம்ப ஆதுரத்தோடே கூரத்தாழ்வான், முதலியாண்டான் போன்ற மஹான்கள், அவர்கள்கூட 

இத: ப்ரவக்தும் – அவர்கள்கூட கொண்டாடிப் பேசுவதற்கு 


அபி வஞ்சநபர: அத்ர யதீந்த்ர! வர்த்தே – இன்றும் அதே வஞ்சனையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வஞ்சனை எல்லாம் மாறிவிட்டது என்று நீர் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம். இன்றும் அப்படியேதான் இருக்கின்றேன்.


வ்ருத்த்யா பஷுர் நரவபு: - ஸாஸ்த்திர அப்பியாஸத்துக்கு யோக்யமான நர ஜன்மம் கிடைத்துவிட்டது. ஆனால் அப்பியாசம் பண்ணி அதற்குண்டான எந்த அநுஷ்டானமும் கிடையாது. அதனால் விலங்காகத் தான் கணிக்கப்படுகிறேன். 


யதீந்த்ர - இப்ப என்னிடம் இருக்கும் கஷ்டத்தையெல்லாம் உம்மிடம் சொல்லிவிட்டேன். எங்கிட்ட சொன்னதாலே என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறார் ராமானுஜர்.


மாமுனிகள்: - “யதீந்த்ரரே! நீர்தான் அனைத்து புலன்களையும் அடக்கியிருக்கிற யோகிகளுக்குள் தலைவர் அல்லவா? அடியேனுக்கும் அந்த புலனடக்கத்தை நீர்தான் கொடுக்கவேண்டும். உம்மால் முடியும் என்பதால்தானே தேவரீரிடத்து வந்து பிரார்த்திக்கொண்டிருக்கிறோம். இப்போதும்”


ப்ரவக்தும் அத்யா அபி வஞ்சநபர: அத்ர யதீந்த்ர! வர்த்தே – நல்லார்கள் எல்லோரும் பார்ப்பர். நாம் ஓரளவுக்கு வேஷம் போட்டுக்கொண்டு வந்திருந்தாலும் நம்பி விடுவார்களாம். வேஷம் போட்டுக் கொண்டு வந்தவனுக்கும் மோக்ஷம் கொடுப்பேன் என்று ஸ்ரீ ராமர் சொல்ல வேறு சொல்லியிருக்கிறார். “மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யயஜேயம் கதஞ்சன தோஷோயத்யபி தஸ்யஸ்யாத்” நாமெல்லாம் பயப்படுவோம். உண்மையில் நண்பன் அல்லாத ஒருவன் நண்பன் போல வேஷம் போட்டுக்கொண்டு நம்மிடம் வந்தால் காலம் பார்த்து இவன் காலைவாரி விட்டுவிடுவானோ என்று பயப்படுவோம். ஆனால் ராமன் தைரியமாகச் சொல்கிறார், “மித்ரனா இல்லாவிடில்கூடப் பரவாயில்லை. மித்ரனா வேஷம் போட்டுக் கொண்டு வந்தாலும் பரவாயில்லை. நான் ஏற்றுகொள்கிறேன் என்கிறார். இந்த மித்ரனாலே ராமனை ஆக்கவும் முடியாது. கெடுக்கவும் முடியாது. அதுதான் அவருக்கிற தைரியம். அதனாலே யார் வேண்டுமானாலும் என்ன வேஷம் வேண்டுமானாலும் போட்டுக்கொண்டு வருங்கள் என்கிறார் ஸ்ரீ ராமர்.


இங்கு மாமுனிகள் பிரார்த்திக்கிறார், “நான் என்னவாயிருந்தாலும் உம்மை மாற்றி விடமுடியுமா? இந்த சின்னவன் வந்ததால் உமக்கிருக்கிற ஞானம் சக்தி இவைகளெல்லாம் இல்லாமல் போய்விடப்போகிறதா என்ன? நெருப்பு நன்றாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்ன குச்சியை அதில் போட்டுவிட்டு நெருப்பை அணைத்துவிட்டேன் என்று சொல்ல முடியுமா. நெருப்பு அதையும் கபளீகரம் பண்ணிவிடாதோ? இன்னும் நன்னா எறியும். அதுபோல நான் என் குற்றத்தைக் கொண்டு வந்து உம்முடைய திருவடியில் போட்டாலும் அதை பஸ்பமாக்கிவிட்டு உம் ஞானமென்னும் அக்னி இன்னும் கொழுந்துவிட்டு எரியும். அப்படித்தான் உம்முடைய பெருமையும் இருக்கிறது. ஆகவே ராமானுஜரே இந்த அழுக்கையும் போக்கி தேவரீர் நல்லது செய்யவேண்டும் என்று ஏழாவது ஸ்லோகத்தில் ஸாதித்தார். 


“வ்ருத்த்யா பஷுர் நரவபு: து அஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண” க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யா அபி வஞ்சநபர: அத்ர யதீந்த்ர! வர்த்தே ||


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 


நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக