புதன், 29 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 20 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 11

पापे क्रुते यदि भवन्ति भयानुतापलज्जाः पुनः करणमस्य कथं घटेत ।
मोहेन मे न भवतीह भयादिलेशः तस्मात् पुनः पुनरघं यतिराज कुर्वे ॥ (11)

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)

யதிராஜ பாபே க்ருதே ஸதி – யதிராஜரே – பாவம் செய்யப் பட்டப்போது, 
ஒருவர் பாபத்தைச் செய்துவிட்டாரானால், இன்ன இன்ன வந்தது என்றால் ப்ராயசித்தம் செய்துவிடலாம். என்ன என்றால் 
1. பாபம் பண்ணிவிட்டோமே என்கிற பயம். 
2. அநுதாபம் – செய்துவிட்டோமே இனி செய்யக்கூடாது என்று அநுதாபப்படுதல். 
3. லஜ்ஜா – வெட்கப்படுவது. 
4. பிராயசித்தம் பண்ண வேண்டும். அதற்காக என்ன பிராயசித்தம் என்று தேடவேண்டும். பாபம் பண்ணி விட்டோமென்றால் இந்த நான்கும் வரவேண்டும். இனி பாபத்தைச் செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும். ஆனால் எனக்கோ இதில் ஏதாவது வந்ததா என்றால் ஒன்றும் வரவேயில்லை. 


மம பய அநுதாப லஜ்ஜா: யதி பவந்தி – அடியேனுக்கு, மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும் உண்டாகுமேயானால், ஆனால் இதில் எதுவும் நான் படவேயில்லை.

அஸ்ய புந: கரணம் கதம் கடேத – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது எப்படிப் பொருந்தும்?

இஹ பயாதி லேஸ: (அபி) – இப்பாவம் செய்யும் விஷயத்தில், பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட, (படவில்லையே)

மோஹேந மே ந பவதி – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே, அடியேனுக்கு பய்ஸ்ம் உண்டாகிறதில்லை. இது தப்பு, இது சரி என்று தெரியாமல் மயங்குவது மோஹம்.

தஸ்மாத் அகம் புந: புந: குர்வே – அதனால் பாவத்தை மறுபடியும் மறுபடியும் செய்துவருகிறேன்.
இப்போது இதைச் செய்தால் நமக்கு அநர்த்தம் வரும் என்ற பயம் முதலில் இருக்கவேண்டும். நாம் அக்ருத்யத்தில் போகக் கூடாதே. போய்விட்டோமே. ஆசார்யர்கள் நம்மைத் தப்பாக நினைத்துக் கொள்வார்களே என்று அநுதாபப் படவேண்டும். தெரிந்தே இதைப் பண்ணியிருந்தாலும், இது தெரிந்தால் எங்கள் தாத்தா, பாட்டி ஆகியோர் எவ்வளைவு வருத்தப்படுவார். எவ்வளவு திட்டுக்கள் கிடைக்கும். என்றாவது வெட்கப் படவேண்டும் அல்லவா? இந்த எதுவும் இல்லை. இதில் ஏதேனும் ஒன்றிருந்தாலே திரும்ப தப்பு பண்ண மாட்டேன். ஆனால் இதில் இன்றுமே மோஹத்தால் எனக்கு வரவேயில்லை. ஆகவே என்னை மூர்க்கன் என்று சொல்லாமல் என்ன சொல்வது. ஆனால் ஶரணம் என்று உம்மிடம் வந்துள்ளேன். திருத்திப் பணிகொள்ள வேண்டும். 

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)

11 வது ஸ்லோகம் நிறைவடைந்தது. 

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக