சனி, 15 ஜூன், 2024

அவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே !

பக்தமீரா மிகப்பெரிய கிருஷ்ணபக்தை. அழகு அவளோடு ஒட்டிப் பிறந்தது. அவளை அவ்வூரிலுள்ள ஒரு இளைஞன் எப்படியாவது அடைந்து விட வேண்டுமெனத் துடித்தான். தனிமையில் இருந்த அவளிடம், "நீ எனக்கு வேண்டும்,'' என வாய் கூசாமல் சொன்னான்.

சாதாரணப் பெண் என்றால் என்ன செய்திருப்பாள்? ஒன்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டியிருப்பாள் அல்லது அவனை உதைத்து அனுப்பியிருப்பாள். 


மீரா இந்த இரண்டையுமே செய்யவில்லை. கேட்டவனே அதிரும்படியாக, "அவ்வளவு தானே! நாளை என்னை எடுத்துக்கொள்,'' என்றாள்.

"
எங்கே, எப்போது வர வேண்டும்?'' அவன் அவசரமாய் கேட்டான். 


"நாளை மாலையில் குளக்கரைக்கு வா,’' என்று அவள் சொல்லவும் கிளம்பிவிட்டான். மறுநாள் மாலையில் குளக்கரைக்கு வந்தான். மீராவைச் சுற்றி பல பக்தர்கள் அமர்ந்திருக்க, அவள் கிருஷ்ணகானம் இசைத்துக் கொண்டிருந்தாள். 


பஜனை முடியும் வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த அவன், "என்னை வரச்சொல்லிவிட்டு இப்படி செய்யலாமா?'' என்றான். 


"உனக்கு தேவை இந்த உடல் தானே எடுத்துக் கொள்,'' என்றாள் அவள்.

"
இத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! இங்கே எப்படி முடியும்?'' என்றவனிடம், 


"சரி...இந்த சாதாரண மனித ஜென்மங்கள் பார்ப்பார்கள் என்பதற்கே வெட்கப்படுகிறாயே! எங்கும் நிறைந்திருக்கும் கண்ணன் நாம் ஒளிந்திருக்கும் இடத்திலும் இருந்து பார்ப்பானே! அப்போது உனக்கு வெட்கமாக இருக்காதா!'' என்றாள். 


வந்தவனுக்கு சுருக்கென்றது. தன் எண்ணத்தை கைவிட்டான். மனம் திருந்தியவனாய் திரும்பினான்.


நன்றி - தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக