இதில் ஒரு தோழி நாரணனின் எளிய செயல்களைக் கூறி ஏளனம் செய்வது போலவும், மற்றொரு தோழி அவளது கேள்வியையே பதிலாக்கி பெருமானது பரத்துவத்தை (தெய்வீகத் தன்மையை) விளக்கிப் பதில் கூறுவது போலவும் பாடப்பட்டுள்ளது. இதில், திருமங்கையாழ்வாரின் தமிழ் இலக்கிய திறனை நன்கு அறியலாம்.
இப்பாசுரம் கண்ணபிரான் தன் தாய் யசோதையிடம் (ஆய்ச்சி) பிடிபட்டு, கயிற்றால் கட்டுண்ட (தாமோதரம்) எளிமையைப் போற்றிப் பாடுகிறது.
எளிய விளக்கம்:
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு: அழகான கரிய கூந்தலையுடைய இடைக்குலப் பெண்ணான தாய் யசோதையிடம் பிடிபட்டு.
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான்: சிறிய கண்ணிகளையுடைய தாம்பு கயிற்றினால் உரலோடு சேர்த்து அவளால் கட்டப்பட்டான்.
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சேயனே: அப்படி எளிமையாகக் கட்டுண்ட போதிலும், அவன் தேவர்களாலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக உயர்ந்தவன், எட்டாத தூரத்தில் இருப்பவன்.
28-03-2026

கருத்துரையிடுக