புதன், 16 அக்டோபர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 59

(திரு. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்கள், துக்ளக் இதழில் வாரந்தோறும் எழுதிய பாகவதத் தொடர் ஸ்வாமிகளின் தொடர் பிரவசனம் மற்றும் பிரயாணத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆயினும் ஶ்ரீமத் பாகவதம் தொடர வேண்டும் என்று எண்ணற்றோர்கள் விண்ணப்பிக்கப்பட்டதால், திருவரங்கம் அருண்குமார் அவர்களின் உதவியோடு ஶ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் மூன்று அத்தியாயம் பதினான்கிலிருந்து தொடர்கிறோம். இப்புத்தகம் உப.வே.ஶ்ரீ.அ.வி.நரஸிம்ஹாச்சாரியாரால் 1916ஆம் ஆண்டில் வசண நடையிலேயே எழுதி வெளியிடப்பட்டது. அதனை நம் தளத்தில் தொடர்வதில் பரமாணந்தம் கொள்கிறோம். பகவத் பாகவத க்ருபையோடும் ஆச்சார்யர்கள் அனுக்ரஹத்தோடும் இதோ...)

மூன்றாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்தியாயம்

(விதுரர், பகவான் வராஹவதாரம் செய்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றதற்குக் காரணம் வினவுதலும், மைத்ரேயர் அதற்குக் காரணம் சொல்லத் தொடங்கி திதிக்கு ஸந்த்யா காலத்தில் கச்யபரிடத்தினின்று கர்ப்பம் உண்டானதைக் கூறுதலும்.) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விதுரன் பகவானுடைய கதைகளையே கேட்கவேண்டுமென்றும், மற்றவை எவையும் செவியிற் படலாகாதென்றும் கடுநியமமுடையவன். ஆகையால் அவன் பகவானுடைய கதைகளை எவ்வளவு கேட்பினும் திருப்தி உண்டாகப் பெறுந் தன்மையனல்லன். அவ்விதுரன் பூமியை உத்தரிக்கையாகிற காரணத்தைப் பற்றி வராஹ உருவங்கொண்ட பகவானுடைய சரித்ரத்தை மைத்ரேய முனிவர் மொழியக்கேட்டும், அது சுருக்கமாயிருந்தமையால் அவ்வளவில் த்ருப்தி உண்டாகப் பெறாதவனாகிக் கைகளைக் குவித்துக்கொண்டு அந்த மைத்ரேய முனிவரைப் பார்த்து வினாவினான்.

விதுரன் சொல்லுகிறான்:- முனிவர்களில் தலைவரான மைத்ரேயரே! எவன் பூமியை எடுத்தானோ, அந்த யஜ்ஞஸ்வரூபனாகிய ஆதிவாரஹ மூர்த்தியே, தைத்யர்களில் முதல்வனாகிய ஹிரண்யாக்ஷனை வதித்தானென்று நீரே சொல்லக் கேட்டோம். தன் கோரைப் பற்களின் நுனியால் அவலீலையாக பூமியை மேலே எடுக்கின்ற அந்த ஆதிவராஹ மூர்த்திக்கும் தைத்யராஜனாகிய ஹிரண்யாக்ஷனுக்கும் எந்தக் காரணத்தைப்பற்றி யுத்தம் நேரிட்டது?

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வீரனே! நீ நன்றாக வினவினாய்? உன் கேள்வியைப் பற்றி நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். ஏனெனில், மரணஸ்வபாவரான மானிடவர்களுடைய ம்ருத்யுபாசத்தை அறுக்கும் திறமை உடையதான ஸ்ரீஹரியின் அவதார கதையைப்பற்றி வினவினாயல்லவா? மனிதர்கள் பிறந்தும் செத்தும் நின்றிடரும் தன்மையராயிருப்பவர். இவர்களுக்கு இந்த ஸம்ஸாரமே ம்ருத்யு. இது பாசம்போல் இவர்களை எல்லாவிதத்திலும் பந்தனஞ் செய்கின்றது. இதை அறுத்துக்கொண்டு மீளுவதற்கு மற்றொரு உபாயம் எதுவும் இல்லை. பகவானுடைய அவதார கதைகளைக் கேட்பார்களாயின், அந்த ஸம்ஸாரம்தானே அறுந்துபோகும். ஆகையால் நீ பகவானுடைய அவதாரத்தைப் பற்றிக் கேட்ட கேள்வி மானிடவர்க்கு மிகவும் நன்மைக்கு இடமாகையால் நான் அதற்கு ஸந்தோஷப் படுகின்றேன். உத்தானபாதனுடைய புத்ரனாகிய த்ருவன் பாலனாயிருந்தே, நாரதமுனிவர் பாடின பகவானுடைய கதையைக் கேட்டு ம்ருத்யுவின் தலையில், அடியிட்டு (ம்ருத்யுவைப் பொருள் செய்யாமல் வென்று) பகவானுடைய ஸ்தானத்தை அடைந்தான். இப்படிப்பட்ட வைபவமுடைய பகவத் கதையைப் பற்றி நீ வினவினையாகையால் அது மிகவும் நன்மைக்கு இடமாயிருக்கும் என்பதைப்பற்றி ஸந்தோஷிக்கின்றேன். வாராய் விதுரனே! நீ வினவின ஹிரண்யாக்ஷனுடைய உற்பத்தி முதலிய வ்ருத்தாந்தத்தைக் கூறுகின்றேன், கேட்பாயாக. இவ்விஷயத்தில் முன்பு நான் இங்ஙனம் ஓர் இதிஹாஸம் கேட்டிருக்கின்றேன். தேவர்க்கும் தேவனாகிய நான்முகனைத் தேவதைகள் வினவும்போது இந்தக் கதையை அவன் அவர்கட்கு மொழிந்தான். அதை நான் பரம்பரையாகக் கேட்டேன். “வாராய் விதுரனே ! தக்ஷப்ரஜாபதியின் புதல்வியாகிய திதி என்பவள் தனக்கு ஸந்தானம் (குழந்தை) உண்டாகவேண்டுமென்று விருப்பமுற்றவளாகிக் காமவிகாரத்தினால் பீடிக்கப்பட்டு ஸந்த்யாகாலத்தில் தன் பர்த்தாவும் மரீசியின் புத்ரருமாகிய காச்யப முனிவரைப் பார்த்துப் புணர விரும்பினாள், காச்யபர் முனிவர்களில் சிறந்தவர். திதியும் மிக்க தவமுடையவள். இப்படிப்பட்ட விவேகமுடையவள் அம்முனிவரைப் பார்த்து அகாலமான ஸந்த்யா ஸமயத்தில் புணர விரும்பினாளாயின் இனி மற்றவரைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? ஆ! என்ன ஆச்சர்யம்? காமத்திற்குக் கண் கிடையாது. எப்படிப்பட்ட விவேகிகளுடைய விவேகத்தையும் அது அழித்துவிடும். அப்பொழுது அந்தக் காச்யப மஹர்ஷி யஜ்ஞங்களுக்கு ப்ரபுவும் (யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படுகின்றவனும்) அக்னியைச் சரீரமாக உடையவனுமாகிய பரமபுருஷனை ஸுர்யன் அஸ்தமிக்கும் ஸமயத்தில் ஹோமங்களால் ஆராதித்து அக்னிஹோத்ர க்ருஹத்தில் உட்கார்ந்து பரப்ரஹ்ம த்யானத்தில் மனவூக்கமுற்றிருந்தார். அத்தகையரான அம்மஹர்ஷியைக்கிட்டி திதி மன்மத விகாரத்தினால் மதிமயங்கப்பெற்று இங்கனம் மொழிந்தாள்.

திதி சொல்லுகிறாள்:- வாரீர் வித்வானே! (எல்லாம் உணர்ந்தவரே!) இந்த மன்மதன், கையில் தனுஸ்ஸை எடுத்துக்கொண்டு தன் பராக்ரமங்களையெல்லாம் காட்டி, வாழைமரத்தை ஓர் மத்தகஜம் பீடிப்பதுபோல், இது நிமித்தமாக தீனையாயிருக்கின்ற என்னை வருத்துகின்றான். அன்றியும், என் சக்களத்திகள் அனைவரும் சிறந்த புதல்வர்களைப் பெற்று வாழ்வதைக்கண்டு அவர்களுடைய ஸம்ருத்திகளால் நான் மனம் பரிதவிக்கப் பெற்றிருக்கின்றேன். ஆகையால் இப்படிப்பட்ட என் விஷயத்தில் அனுக்ரஹம் செய்யவேண்டும். உமக்கு க்ஷேமம் உண்டாகுக. பர்த்தாவிடத்தில் அங்க வெகுமானம் பெற்ற மடந்தையர்களின் புகழ் எல்லா உலகங்களிலும் நிரம்பி நிற்கும். பர்த்தாவினிடத்தில் பெறும் வெகுமதி யாவதெனில், சொல்லுகிறேன். உம்மைப்போன்ற கணவன் மடந்தையரிடத்தில் ப்ரஜாரூபமாய்ப் பிறப்பானாயின் (உம்மைப்போன்ற கணவனிடத்தினின்று மடந்தையர் புதல்வரைப் பெறுவார்களாயின்) அவர்கட்கு அதுவே சிறந்த வெகுமதியாம். அவரது புகழ் ஸமஸ்த லோகங்களிலும் நிறைந்து நிற்கும். மற்றும், பெண்களிடத்தில் வாஞ்சையுடைய எங்கள் பிதாவான தக்ஷப்ரஜாபதியானவர் முற்காலத்தில் எங்களைத் தனித்தனியே விசாரிக்கத் தொடங்கி “குழந்தாய்! நீ எந்த மணவாளனை மணம்புரியப் போகின்றாய்?” என்று வினாவினார். ஸந்தானத்தை (குழந்தையை) வளரச்செய்யும் தன்மையுள்ள அந்த தக்ஷப்ரஜாபதி தன் புத்ரிகளாகிய எமது அபிப்ராயத்தை அறிந்து அந்தப் பெண்களில் எவர்கள் உம்முடைய ஸ்வபாவத்தை விரும்பியிருந்தார்களோ, அந்தப் பதின்மூன்று பெண்களையும் உமக்குக் கொடுத்தார். நாங்கள் பதின்மூவரும் உம்மிடம் அபிப்ராயம் ஒத்திருப்பினும், நீர் வைஷம்யத்தை (பக்ஷபாதத்தை) ஆசரிப்பது யுக்தமன்று. ஆகையால், வாரீர் காச்யப மஹர்ஷீ! மங்கள ஸ்வபாவமுடையவரே! எனது விருப்பத்தை நிறைவேற்றுவீராக. தாமரையிதழ்போன்ற கண்களையுடையவரே! மிகுந்த மஹிமை அமைந்தவரே! மஹானுபாவனான ஓர் புருஷனிடத்தில் வருத்தமுற்றவர் எவரேனும் அடுத்து வருவார்களாயின், அவர்கள் அங்ஙனம் அடுத்து வருவது வீணாகாதல்லவா? ஆகையால் மஹானுபாவராகிய உம்மை மன வருத்தத்துடன் அடுத்திருக்கின்ற அடியாளுடைய விருப்பத்தை நீர் அவசியம் நிறைவேற்றவேண்டும்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் வீரனாகிய மாத்ரமேயன்றி மோக்ஷ புருஷார்த்தமுமாகவே ஸித்திக்கப் பெறுவான். பரலோகத்தை விரும்பும் புருஷனுடைய பத்னியைச் சரீரத்தின் மதியென்று சுருதிகள் சொல்லுகின்றனர். ஸ்வர்க்கத்தையும் அபவர்க்கத்தையும் (மோக்ஷத்தையும்) ஸாதிக்க வல்லவைகளான தர்மங்களில் ஸ்த்ரீ புருஷர்கள் இருவர்க்கும் சேர்ந்தே அதிகாரம் உளது. பத்னியில்லாதவனுக்கு அந்தக் கார்யங்களில் அதிகாரமில்லை. பத்னியிடத்தில் இஹபரலோக பாரங்களை வைத்துப் புருஷன் மனக்கவலை தீர்ந்து கரையேறுவான். நாங்கள் பத்னியைக்கொண்டு, மற்றை ஆச்ரமஸ்தர்களால் ஜயிக்க முடியாத இந்திரியங்களாகிற சத்ருக்களை அவலீலையாக வெல்லுவோம். துர்க்கத்திலிருப்பவன் திருடன் முதலிய துஷ்ட ஜீவன்களை எப்படி அனாயாஸமாக ஜபிப்பானோ, அப்படியே க்ருஹஸ்தாச்ரமத்தில் இருப்பவர் இந்திரியங்களை அனாயாலமாக ஜயிப்பார்கள். ப்ரஹ்மசாரி, ஸந்யாஸி, வானப்ரஸ்தன் ஆகிய இம்மூன்று ஆச்ரமஸ்தர்களும் சப்தாதி விஷயங்களில் மனம் செல்லப்பெறுவார்களாயின் அதோகதியைப் பெறுவார்கள், அவர்க்கு அது கூடாதென்று சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்டு இருக்கிறதாகையால் தோஷத்தை விளைக்கும் க்ருஹஸ்தனுக்கு சப்தாதி விஷயானுபவத்தைச் சாஸ்த்ரங்கள் தோஷமாகச் சொல்லவில்லையாகையால் அவனுக்கு அது அதோஷமாகமாட்டாது. க்ருஹஸ்தனும் சாஸ்திரங்களுக்கு நிஷேதிக்கப்பட்ட சப்தாதி விஷயங்களில் முயற்சி கொள்வானாயின், அதோகதியைப் பெறுவான் என்பதில் சந்தேஹமில்லை. சாஸ்த்ரங்கள் அனுமதி கொடுத்த சப்தங்களை அனுபவிப்பதில் யாதோரு விரோதமில்லை. ஆகையால் கிருஹஸ்தன் இந்திரியனங்களை விரும்புகின்றவனுக்கல்லவோ தன்னுடையவனென்றும் பிறனென்றும் பேதபுத்தி உண்டாகும். இவனோவென்றால் எல்லோரையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையன். ஸாம்ஸாரிக லோகங்களையும் ஸம்ஸாரத்திலுள்ள அதிசயங்களையும் எதிர்பார்க்கின்றவனல்லன். ஆகையால் இவனுக்குத் தன்னுடையவனென்றும் பிறனென்றும் பேதம் பாராட்டுந்தன்மை கிடையாது. ஸம்ஸாரத்தில் கால் தாழ்ந்த நாம் இம்மஹானுபாவன் பாதங்களால் உதைத்து தூரத்தில் துறந்ததும் அவனால் போகங்களெல்லாம் அனுபவிக்கப் பெற்றதுமாகிய மாயையை (மாயை யெனப்படுகிற ப்ரக்ருதியின் பரிணாமமாகிய இந்தப்ரபஞ்சத்தை) நானாவித ஐஸ்வர்யங்களை ஸாதித்துக்கொடுப்பவையாகிய வ்ரதங்களை அனுஷ்டித்து ப்ரார்த்திக்கின்றனம். 'இவன் ச்மசாரங்களில் திரிகின்றவன்; ஆனதுபற்றியே அபரிசுத்தஸ்வபாவன். இத்தகையனான இவனிடத்தினின்று. என்னென்று சங்கிக்கின்றாய்' என்கிறாயோ? ஜ்ஞானத்தை மறைப்பதாகிய அவித்யையின் ஆவரணத்தைப் பேதிக்க வேண்டுமென்று விரும்பும் பண்டிதர்கள் இந்த ருத்ரனுடைய சரித்ரத்தை நிர்த்துஷ்டமென்று புகழ்கின்றார்கள், ஜ்ஞானத்தை விரும்புகிறவர்கள் சிலர் இவனை உபாஸிக்கின்றார்கள். ஆகையால் பிசாசு போல் ஸ்மசானங்களில் திரிகின்றானென்று இவனைப் பழிக்கலாகாது. 'ஆனால் அவன் ஏன் பிசாசுபோல் ச்மசானங்களில் திரிகின்றான்?' என்னில், தனக்கு நிகரானதும் மேற்பட்டவனுமில்லாதபடி மிகவும் சிறப்புற்றவனாயினும், ஜ்ஞானத்தை விரும்பும் ஸத்புருஷர்களுக்கு ஜ்ஞானத்தை விளைக்கும் உபாயமாகி ஜ்ஞானம் பெற விரும்பி தன்னை உபாஸிக்கின்றவரும் இங்ஙனமே இருக்க வேண்டுமென்று அவர்களைப் பயிர்ப்பிக்கும் பொருட்டு பிசாசங்களின் ஆசாரத்தை அனுஷ்டித்து வருகின்றான். அன்றியும் சொல்லுகின்றேன், கேட்பாயாக, இவன் தன்னைத்தான் அனுபவிப்பதில் ஊக்கமுற்றிருப்பான். இவனுடைய நடத்தையை அறியாதவர் இவனுடைய ஆசாரத்தை சித்திக்கின்றார்கள். அவர்கள் பாக்யமற்றவர்களே. அங்ஙனம் நிந்திப்பவர் யாரெனில், சொல்லுகின்றேன். எவர், நாய்முதலிய ஜந்துக்கள் புஜிக்கும்படியான சரீரத்தையே ஆத்மாவென்று ப்ரமித்து, அதை ஆடைகளாலும் பூமாலைகளாலும் ஆபரணங்களாலும் கஸ்தூரி குங்குமம் சந்தனம் முதலிய பூச்சுக்களாலும் அலங்கரிக்கின்றார்களோ, அவர்களே (அந்த தேஹாத் மாபிமானிகளே) இம்மஹானுபாவனுடைய ஆசாரத்தைப் பரிஹஸிக்கின்றார்கள். அவர்கள் பாக்யமற்றவர் என்பதில் ஸந்தேஹமுண்டோ? ப்ரஹ்மதேவன் முதலியவர்களும் இந்த ருத்ரனால் ஏற்படுத்தப்பட்ட தர்ம மரியாதைகளைப் பாதுகாத்து வருகின்றார்கள். ஜகத்தெல்லாம் இந்த ருத்ரனையே காரணமாகவுடையது. மாயையெனப்படுகிற ப்ரக்ருதியானது இவனுடைய ஆஜ்ஞைப்படி நடக்கின்றது. எல்லையில்லாத மஹிமைகள் அமைந்த இம்மஹானுபாவன் பிசாசங்களைப் போல் ச்மசானங்களில் ஸஞ்சரிப்பது அனுகரணமே. இவனுக்கு அது இயற்கையில் ஏற்பட்டதன்று; லீலைக்காக ஏறிட்டுக்கொண்டதே. பிசாசங்களைப் போல் நாம் ச்மசானங்களில் ஸஞ்சரிக்க வேண்டுமென்னும் விருப்பத்தினால் அவற்றின் ஆசாரத்தைத் தொடர்ந்து நடக்கின்றானன்றி வேறில்லை. இங்கனம் மஹிமைகள் அமைந்த இம்மஹாபுருஷன் பிசாசங்களின் ஆசாரத்தைப் பின்செல்வது ஆச்சர்யமே.

மைத்ரேயர் சொல்லுகின்றார் :- இக்கனம் பர்த்தாவான காச்யபர் தெரிவிக்கையில், மன்மத விகாரத்தினால் இந்திரியங்களெல்லாம் கலங்கப்பெற்ற அந்த திதி ஓர் விதைபோல் வெட்கமற்றவளாகி ப்ரஹ்ம ரிஷியாகிய அந்தக் காச்யபருடைய வஸ்த்ரத்தைப் பிடித்து இழுத்தாள். அந்தக் காச்யபர் ஸந்த்யாகாலத்தில் செய்யலாகாதென்று சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்டிருக்கின்றமையால், அப்பொழுதைக்கு விபரீதமாகிய கார்யத்தில் தன் பார்யையாகிய திதி செய்யும் நிர்ப்பந்தத்தைக் கண்டு தெய்வ ஸ்வரூபனாகிய ஈஸ்வரனுக்கு நமஸ்காரஞ் செய்து அந்த பார்யையுடன் ஏகாந்தத்தில் கலந்திருந்தார். ஆ! என்ன ஆச்சர்யம்? அப்பால் அம்மஹர்ஷி ஜலத்தில் ஸ்னானம் செயது ப்ராணாயாமம் பண்ணி மௌன வ்ரதத்துடன் விகாரங்களற்றவனும் ஜ்ஞான ஸ்வரூபனும் என்றும் அழியாதிருப்பவனுமாகிய பரப்ரஹ்மமென்னும் பரமபுருஷனை த்யானித்துக்கொண்டு ப்ரணவத்தை ஜபித்தார். வாராய் விதுரனே! பிறகு திதி தான் செய்த கெட்டகார்யத்தின் தோஷத்தை நினைத்து வெட்கமுற்று அம்மஹர்ஷியின் அருகாமையில் வந்து தலை வணங்கப் பெற்றவளாகி ப்ரம்மரிஷியாகிய அந்தக் காச்யபரைப் பார்த்து இங்கனம் மொழிந்தாள்.

திதி சொல்லுகிறாள் :- வாரீர் ப்ராஹ்மணோத்தமரே! காச்யப மஹர்ஷீ! பூதங்களுக்கு நாதனாகிய ருத்ரன் என்னுடைய இந்த கர்ப்பத்தைப் பாழ் செய்யாதிருப்பானாக. அவன் பூதங்களுக்கு நாதனென்றீர். அவன் விஷயத்தில் நான் அபராதஞ் செய்தேன். ஆகையால் அவன் என் கர்ப்பத்தைப் பாழ் செய்யக்கூடும். அப்படி சேராதிருக்கும் படி நீர், அருள்புரிய வேண்டும். தேவர்களில் மேன்மை பெற்றமையால் மஹாதேவனென்று பேர் பெற்றவனும் உக்ர ரூபனுமாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம். இவள் தன்னைப் பணிந்தவளுடைய விருப்பங்களைப் செய்யும் தன்மையனல்லவா? ஒருபலனையும் விரும்பாமல் தன்னைப் பற்றுவோரிடத்தில் மங்கள ஸ்வபாவனாயிருப்பவன். இயற்கையில் எவர்க்கும் தண்டனை செய்பவனல்லன், அபராதஞ் செய்து கோபத்திற்கிடமானவரிடத்தில் தண்டனை செய்யும் ஸ்வபாவன்; ஸம்ஹார காலத்தில் கோபஸ்வரூபனாயிருப்பவன். இத்தகையனான இந்த ருத்ரனுக்கு நமஸ்காரம் செய்கின்றேன். என் உடன் பிறந்தவளது பர்த்தாவும் மிகுந்த அனுக்ரஹம் உடையவனும் பார்வதியின் பதியும் பகவானுமாகிய அந்த ருத்ரன், தயையென்பது சிறிதுமில்லாத வேடர்களாலும் தயை செய்யத்தகுந்த ஸ்த்ரீகளாகிய எமது விஷயத்தில் அருள் புரிவானாக.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்தக் காச்யப ப்ரஜாபதி ஸந்த்யாகாலத்திற்கு செய்யவேண்டிய நியமமெல்லாம் முடிந்த பின்பு, தன் கர்ப்பத்திற்குத் தான் தேடவேண்டிய க்ஷேமத்தை ப்ரார்த்திக்கின்றவளும் பயத்தினால் நடுக்கமுற்றவளுமாகிய பார்யையைப் பார்த்து இங்கனம் மொழிந்தார்.

காச்யபர் சொல்லுகிறார்:- மங்கள ஸ்வபாவமுடையவளே! உன் புத்தி சுத்தியற்றிருந்தமையாலும், ஸந்த்யாமுஹூர்த்தத்தில் செய்யக் கூடாத கார்யத்தைச் செய்த தோஷத்தினாலும், அன்றியும் எனது ஆஜ்ஞையைக் கடந்தமையாலும், ருத்ரன் முதலிய தேவதைகளை அவமதித்தமையாலும் உனக்கு இரண்டு புத்ராதமர்கள் (உபயோகமற்ற பிள்ளைகள்) பிறக்கப் போகின்றார்கள். அவ்விருவரும் உலகங்களுக்கு அமங்களத்தைச் செய்பவராயிருப்பார்கள். அவர்கள் பெருங் கோபாவேசமுற்றவராகி லோகபாலர்களோடு கூடின மூன்று லோகங்களையும் அடிக்கடி அழப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஒரு அபராதம் செய்யாமல் தயைசெய்யத் தகுந்தவைகளான ப்ராணிகளை எல்லாம் வதிப்பதும், ஸ்த்ரீகளைப் பறித்துக்கொண்டு வந்து சிறையில் அடைப்பதும், மஹானுபாவர்களான பெரியோர்களுக்குக் கோபம் வரும்படி செய்வதுமே தொழிலாயிருப்பார்கள். இப்படி இருக்கும் தருணத்தில், உலகங்களுக்கெல்லாம் ப்ரபுவும் அவற்றிற்கு ஸுகத்தை விளைப்பவனுமாகிய பகவான், அப்பொழுது கோபாவேசமுற்று, வராஹமாகவும் நரஸிம்ஹனாகவும் அவதாரஞ் செய்து, பர்வதங்களை வஜ்ராயுதம் பிடித்த தேவேந்த்ரன் பிளப்பது போல் யுத்தத்தில் வதிக்கப் போகின்றான்.

திதி சொல்லுகிறாள்:- ப்ரபூ! எல்லாவற்றையும் அறியும் திறைமையுடையவரே! சக்ராயுதத்தினால் அழகிய புஜத்தையுடைய பகவான் தானே நேரில் என்புத்ரர்களை வதைப்பானாயின், அதை நான் ஸம்மதிக்கின்றேன். ஆனால் கோபமுற்ற ப்ராஹ்மணன் மூலமாய் வதம் நேருமாயின், அது எனக்கு ஸம்மதமன்று. அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். “பெரியோர்களுக்குக் கோபத்தை விளைவிப்பார்கள் உன் புதல்வர்கள்” என்று மொழிந்தீர். அதனால் “ப்ராஹ்மணர் கோபித்து எங்கு வதித்து விடுகின்றார்களோ” என்று பயந்தேன்: பரமபுருஷன் நேரே வதிப்பானாயின், அது எனக்கு ஸம்மதமே. “பெண்ணே ! ப்ராஹ்மணனிடத்தினின்றாவது மற்ற எவனிடத்தினின்றாவது வதம் நேரட்டுமே. அதில் நீ என்ன விசேஷத்தைக் கண்டாய் என்கிறீரோ? சொல்லுகிறேன். ப்ராஹ்மண சாபத்தினால் அடியுண்டவன் விஷயத்திலும் ப்ராணிகளுக்கெல்லாம் பயத்தை விளைக்கின்றவன் விஷயத்திலும் “உலகத்திலுள்ளவன் எவனுக்கும் நம்மால் துக்கம் வரவேண்டாம்” என்று நினைக்கும் தன்மையுள்ள நரகவாஸியான ஜந்துக்களும் அனுக்ரஹம் செய்யமாட்டார்கள். கீழ்ச் சொன்ன இரண்டுபேர் விஷயத்திலும் நரகவாஸிகளும் மன இரக்கம் உண்டாகப் பெறமாட்டார்கள். ஆகையால் ப்ராஹ்மண சாபத்தினால் மாண்டவரும் ஸமஸ்த லோகங்களுக்கும் பயம் விளைப்பவரும் மஹாபாபிஷ்டர்கள். அன்றியும், இவர்கள் எந்தெந்த ஜாதியில் பிறக்கின்றார்களோ, அந்தந்த ஜாதியிலுள்ள இனத்தார்களும் இவரிடத்தில் மன இரக்கம் கொள்ள மாட்டார்கள். ஆகையால் ப்ராஹ்மண சாபத்தினால் நேரும் மரணத்திற்கு நான் பயப்படுகின்றேன். அது அவர்களுக்கு நேராதிருக்கும் படி அருள்புரிய வேண்டும். சக்ராயும் தரித்த பரமபுருஷன் தானே வதிப்பானாயின், அது எனக்கு ஸம்மதமே.

காச்யபர் சொல்லுகிறார் :- மங்கையர் மணியே! நீ, தான் செய்த அபராதத்தைப்பற்றி அனுதாபப்படுகையாலும், உடனே யுக்தா யுக்தங்களைப்பற்றி விசாரித்தமையாலும் பரமபுருஷனிடத்தில் வெகுமதி உண்டாயிருப்பதினாலும் ருத்ரனிடத்திலும் என்னிடத்திலும் ஆதரவோடு இருக்கின்றமையாலும், உன் புதல்வர்களிருவரில் ஒருவனாகிய ஹிரண்யகசிபுவுக்கு ஸத்புருஷர்களால் புகழத்தக்க ஓர் புதல்வன் உண்டாவான். அவன் ப்ரஹ்லாதனென்னும் பெயர் பெறுவான். இந்த உன்பேரனுடைய புகழைப் பகவானுடைய புகழோடொக்கப் பாடுவார்கள். அன்றியும், உன் பேரனுடைய ஸ்வபாவத்தை அனுஸரிப்பதற்காக ஸத்புருஷர்கள், கட்டைமாற்றான பொன்னை யவக்ஷாரம் முதலியவற்றைச் சேர்த்து அக்னியில் புடமிடுவது முதலிய உபாயங்களால் சுத்தி செய்வதுபோல், தமது மனத்தை நிர்வைரத்வம் (வைரமற்றிருக்கை) முதலிய குணங்களால் ஸ்வாதீனப்படுத்த முயற்சிகொள்வார்கள், “நாம் இவனைப்போல் நிஷ்ட்டை பெறவேண்டும்” என்று ஸத்புருஷர்களும் ஆசைப்பட்டு அனுஸரிக்கும்படி உன் பேரன் அழகிய சீலமுடையவனாயிருப்பான். மற்றும், எந்த பகவானுடைய அனுக்ரஹத்தினால் இந்த ஜகத்தெல்லாம் அருள்புரியுமோ, இந்த ஜகத்தெல்லாம் எந்த பகவானுடைய ஸ்வரூபமாயிருக்கின்றதோ, “எவன் மற்றொரு கருவியையும் எதிர்பாராமல் தானே எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்க வல்லவனோ, அப்படிப்பட்ட பரமபுருஷன் உன் பேரனுடைய பக்தியால் ஸந்தோஷம் அடைவான். அவனுக்கு பகவானிடத்தில் என்றும் மாறாத பக்தி உண்டாயிருக்கும். அத்தகைய உன் பேரன் பகவானிடத்தில் நிகரில்லாத பக்தியுடையவனும் மிகுந்த ப்ரபாவமுடையவனும் பரிசுத்தமான மனமுடையவனும் மஹிமையுடைய பெரியோர்களிடையிலும் மிகுந்த மாஹாத்ம்யம் உடையவனுமாகி மேன்மேலும் வளர்ந்து வருகின்ற பகவத் பக்தியால் சோதிக்கப்பெற்ற (அழுக்கெடுக்கபெற்று நிர்மலமாயிருக்கின்ற) தன்மனத்தில் பகவானை நிலைநிறுத்திக்கொண்டு அந்த பகவானையொழிந்த மற்ற ஜஸ்வர்யம் முதலியவற்றையெல்லாம் துச்சமாக நினைத்துத் துறக்கப்போகின்றான். அன்றியும், அவன் பகவானையொழிந்த மற்ற எந்த வஸ்துவிலும் மனப்பற்றில்லாமல் நல்ல ஸ்வபாவமுடையவனும் குணங்களுக்கு விளைநிலமாகிப் பிறருடைய ஸம்ருத்தி எவ்வளவு அதிகமாயிருக்கக் காணிலும் மிகுந்த ஸந்தோஷமுறுபவனும் பிறர் வருத்தப்படக் காண்பானாயின் தானும் வருத்தமுறுகின்றவனும் தனக்குச் சத்ருக்கள் ஒருவரும் சேரப் பெறாதவனுமாயிருப்பான். சந்திரன் வெயிற்காலத்தில் விளையும் வெப்பத்தையெல்லாம் போக்குவதுபோல் அவன் ஜகத்தின் சோகத்தையெல்லாம் போக்கும் திறமையுடையவனாய் இருப்பான். உன் பேரன் ஜ்வலிக்கின்ற குண்டலங்கள் பல அங்கரிக்கப்பெற்ற முகமுடையவனும் தன் பக்தர்களின் விருப்பங்களுக்குத் தகுந்தபடி அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹங்களைக் கொள்கின்றவனும் தாமரை இதழ்போன்ற கண்களுடையவனும் கெட்டகுணங்கள் சிறிதும் தீண்டப்பெறாதவனும் மங்கையர் மணியாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஆபரணம் போன்றவனுமாகிய பரமபுருஷனைத் தன் ஹ்ருதயகமலத்திலும் வெளியிலும் காணப்பெறுவான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- திதி தனக்கு ஓர்பேரன் பிறப்பானென்றும், அவன்மிகுந்த பகவத்பக்தி உடையவனாயிருப்பான் என்றும் கேட்டு மிகவும் ஸந்தோஷம் அடைந்தாள். தன் புதல்வர்களுக்கு பகவானிடத்தினின்று வதம் நேருமென்பதை அறிந்து, “என் புதல்வர்கள் ஸ்ரீமஹா விஷ்ணுவுடன் யுத்தம் செய்து அவன் கையால் மரணம் அடையப் போகின்றார்களாகையால் அவர்க்குப் புகழும் நற்கதியும் விளையும்” என்பதை ஆலோசித்து மனத்தில் உத்ஸாஹமுடையவளாயிருந்தாள். 

பதினான்காவது அத்யாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக