திங்கள், 11 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 30 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 18

தேவரீருடைய ஜனங்கள் என்றால் பாபவிமோசனத்தை நீர் பண்ணிவிடுவீர். நாங்கள் செய்ய வேண்டியது என்ன? ராமானுஜருடைய திருவடியை சேர்ந்த ஜனங்கள் என்று தெரிவதற்கு கூட்டத்துக்குள் நுழைந்து விடவேண்டும். 

ஈஸ்வரன் உமக்கு பவ்யன். அவரே நீர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார். ஆனால் பண்ணியிருக்கிற குற்றத்தை ஈஸ்வரன் பார்த்தால் அவர் கோவித்துக் கொள்ள மாட்டாரோ. அதற்கு நான் என்ன பண்ணுவேன். ராமானுஜர் புருஷாகாரம் பண்ணுகிறார். பண்ணினால் மட்டும் கிடைத்துவிடுமா? ஒரு கல்லூரியில் தன் மகனுக்கு இடம் வேண்டும் என்று தகப்பனார் சிபாரிசுக் கடிதத்தோடு முதல்வரை அணுகினார். அவன் வாங்கிய மார்க்கோ 55. அதுவாவது பரவாயில்லை என்று சேர்த்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அவனது நடத்தை சரியில்லை என்று தெரியவந்தால் அப்பொழுது என்ன சொல்லுவார். சிபாரிசு செய்தவரின் பெயரைக் கெடுத்து விடுவாய் என்றல்லவா சொல்லுவார். 

ராமானுஜரிடம் போய் அதுபோல சிபாரிசு கடிதம் பெற்று பகவானை அணுகினேன். அவர் சரி ராமானுஜர் கடிதம் கொடுத்துள்ளார், அதனால் எந்த கர்ம, ஞான, பக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனாலும் அனாதிகாலமாக பண்ணிய துஷ்க்ருதிகள் கண்டு சீறினால் நான் என்ன செய்வேன். என்று ராமானுஜர் சொல்வதாகக் கொண்டு மணவாள மாமுனிகள் சொல்கிறார். ஒரு முதல்வருக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பவர் மனதுக்குள் நுழைந்து தான் சிபாரிசு செய்பவன் நல்லவனா கெட்டவனா என்று பார்க்கத் தெரியாது. ஆனால் ராமானுஜரே நீர் அப்படிப் பட்டவரா? நான் உம்மிடம் வந்து விட்டாலே உம் கடாக்ஷம் என் மீது பட்டுடுத்து என்று அர்த்தம். பட்டுவிட்டது என்றாலே அனாதிகால பாபம் தொலைந்து விட்டது என்று அர்த்தம். தொலைந்துவிட்டது என்றாலே பெருமாள் கண்ணுக்கு அது படாது என்று அர்த்தம். இந்த உண்மை எனக்குத் தெரியாதா? அதனால்தானே திரும்பத் திரும்ப வந்து உம்மிடம் நிற்கிறேன். 

லௌகீகத்தில் நமக்கு சிபாரிசு பண்ணுகிறவர்களுக்கு நம் குற்றங்களைப் போக்கும் சக்தி கிடையாது. ராமானுஜர் அப்படியா? தன் கடாக்ஷத்தால் பாபத்தைப் போக்கும் சக்தி உள்ளவராயிற்றே. தேவரீரின் திருக்கண் பார்வை என் மீது பட்டது என்றால் அனாதிகால பாபமும் தொலைந்து விடுமே. வருபவன் அப்பழுக்கற்றவனாக ஆகியிருக்கணும். அந்த மாதிரி மாற்றி அனுப்பக்கூடியவரின் சிபாரிசையே பகவான் ஏற்றுக் கொள்வார். ஆக்கவல்ல சக்தியுள்ளவரிடம்தான் அவர் உரிமையைக் கொடுப்பார். உம் கடாக்ஷத்தால் என் பாபம் தொலையும். 

அன்னை குடிநீர் அருந்தி முலையுண்குழவி     
தன்னுடைய நோயைத் தவிராளோ* - என்னே     
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்*      
உனக்கு அது தாழ்வோ உரை. ஆர்த்திப் பிரபந்தம்

 பகவானது கோபத்துக்கு மாற்று மருந்து சரணாகதி. திருவடியே என்று சரணாகதி பண்ணி விட்டால் கோபத்தை மாற்றிக் கொள்வார். அந்த சரணாகதி பண்ணும் யோக்யதைகூட என்னிடமில்லை. அப்ப ஒரேவழி என்ன? குழ்ந்தைக்கு மருந்து சாப்பிடும் தகுதி இல்லை என்றால் எப்படித் தாய் மருந்துண்டு அதன் நோயைப் போக்குகிறாளோ அதுபோல தேவரீர் தான் அடியோங்களுக்காக சரணாகதி பண்ணி அடியோங்களுடையை வியாதியைப் போக்கியாகணும். அந்த சாரணாகதியையும் நீர் ஏற்கனவே பங்குனி உத்தரத்தன்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு பெருமாளிடம் பண்ணிவிட்டீராமே. 

பகவன் நாராயண அபிமதானுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய ஶீலாத்ய 
அநவதிகாதிஶய அஸங்க்யேய கல்யாண குண கணாம் பத்ம வநாலயாம், 
பகவதீம், ஶ்ரியம் தேவீம் நித்யாநாபாயிநீம், நிரவத்யாம் தேவதேவ திவ்ய மஹிஷீம், 
அகில ஜகன்மாதரம், அஶ்மன்மாதரம், அஶரண்ய ஶரண்யாம் 
அநந்ய ஶரண: ஶரணமஹம் ப்ரபத்யே! ஶரணாகதி கத்யம்.

 என்றுதாயாரை முன்னிட்டுக் கொண்டு திருவரங்கநாதரிடம் நீர் சரணாகதி செய்துவிட்டீராமே. அப்பொழுது பெரிய பெருமாள் உமக்கு என்ன வேணும் என்று கேட்டாராம், அதற்கு நமக்கும் நம் ஸம்பந்திகளுக்கும் மோக்ஷம் அருளவேண்டும் என்று கேட்டீராம். ஆக எங்கள் அனைவருக்குமாக நீரே சரணாகதி செய்துவிட்டீர் என்று கேள்விப்பட்டோம். அதை நம்பித்தான் வாழ்கிறோம் என்றார் பெரிய ஜீயர். 

அன்னை மருந்து சாப்பிட்டு குழந்தை நோயைப் போக்குவது போலே தேவரீர் எங்களுக்காக சரணாகதி செய்து ஸம்சாரம் என்னும் நோயைப் போக்குகிறீர். 

कालत्रयेSपि करणत्रयनिर्मितातिपापक्र्यस्य शरणं भगवत्क्षमैव ।
सा च त्वयैव कमलारमणेSर्थिता यत् क्षेमस्स एव हि यतीन्द्र! भवच्छ्रितानाम् ॥ (18)

 காலத்ரயேSபி கரணத்ரயநிர்மிதாதி
பாபக்ரியஸ்ய ஶரணம் பகவத்க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேSர்த்திதாயத் 
க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் || (18)

பவச்ச்ரிதாநாம் ஸ ஏவ, ஹி க்ஷேம – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரின் திருவடியை ஆஶ்ரயித்தவர்களுக்கு / அடியார்களுக்கு அதுவேதான் க்ஷேமம். உய்யும் உபாயமல்லவா? தேவரீர் கமலா ரமணன் திருவடிகளில் சரணாகதி செய்துள்ளீராமே. அதுதான் எங்கள் எல்லோருக்கும் க்ஷேமம். நான் பண்ணியதெற்கெல்லாம் ஒரே பிராயச்சித்தம் சரணாகதி அந்த சரணாகதியையும் நீர் எங்களுக்காக செய்துவிட்டீர். க்ஷமா ஒன்றுதான் வழி: 

யே யதீந்த்ர காலத்ரயே அபி கரணத்ரயநிர்மித – வாரீர் யதிராஜரே, கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும், மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் பத்துப் பத்தாகச் செய்யப்பட்ட இதே விஷயத்தைத்தான் ஸ்ரீ ராமானுஜரும் கத்யரத்ரயத்தில் பிரார்த்திக்கிறார்.

“மனோ வாக் காயை: அனந்தகால க்ருத்யாகரண அக்ருத்யகரண, பக்வதபசார, பாகவதபசார, க்ருதான், க்ரியமாணான் கரிஷ்யமாணான், ஆரப்த கார்யான் அனாராப்த கார்யான் ஸர்வாபராதான் க்ஷமஸ்வ.” என்னென்ன உண்டோ அத்தனையையும் சொல்லி அனைத்து அபராதங்களையும் க்ஷமிக்க பிரார்த்தனை செய்கிறார் ராமானுஜர்.

அதிபாபக்ரியஸ்ய ஸரணம் – ‘பாபக்ரியா’ என்றால் செய் என்று சொல்வதைச் செய்யாமல் இருப்பது. செய்யாதே என்பதைச் செய்வது. ‘அதிபாபக்ரியா’ என்றால் பகவதபசாரம், பாகவத அபசாரம். (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு) மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு, இது எல்லாவற்றுக்கும் ஒரே புகல் எது? பாவங்களைப்போக்கும் உபாயமானது,

பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும்., பொறுத்துக் கொள்ளுதலே ஆகும். மன்னிக்கிறார் இல்லையா? அபராத ஸஹஸ்வம் என்கிற குணம் அந்த ஒன்றைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

அந்தப் பொறுமையோ எனில்

ஸா ச த்வயா ஏவ கமலா ரமணே - அப்படிப்பட்ட, பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே, கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில், ஸ்ரீயப்பதியிடத்தில்

அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ, தேவரீரே அந்த சரணாகதியைப் ப்ரார்த்தித்து விட்டீராமே, அது எங்களுக்கு தெரியவந்துள்ளது. அந்தப் பிரார்த்தனைதான் எங்களுக்கு க்ஷேமத்தைக் கொடுக்கும். ராமானுஜரின் அபிமானத்துக்குள்ளே யாரெல்லாம் அந்தர்பூதரோ, நிழலில் யாரெல்லாம் ஒதுங்கி இருந்தார்களோ அவர்களுக்காக எல்லாம் நீர் மன்றாடுகிறீராமே. ப்ரார்த்தித்தீராமே. எப்படி வேண்டினார், “மனோ வாக் காயை: என்று ஆரம்பித்து.... ஸார்வான் அஶேஷத: க்ஷமஸ்வ” அனைத்துப் பாபங்களையும் ஒன்று விடாமல் க்ஷமித்து விடவேண்டும். அவர் தனக்காகப் ப்ரார்த்தித்தார்.

ஒரு நாட்டில் பஞ்சம் வந்துவிட்டது. ஒவ்வொரு வீடாகச் சென்று எவ்வளவு அரிசி வேண்டும் என்ற கணக்கெடுப்பு செய்தார் ஒரு அதிகாரி. உங்களுக்கு எவ்வளவு அரிசி ஒருமாதத்துக்கு வேண்டும் என்று கேட்டார். அந்த வீட்டுத் தலைவன் ஒரு மாதத்துக்கு 45 படி அரிசி வேண்டும் என்றார். உம் ஒருவருக்கா? இல்லை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து என்றார். அவர் எப்படி தன் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் பிரார்த்தித்தது போல ராமானுஜர் பிரார்த்தனை செய்யும்போது அந்த பிரார்த்தனை அவரது நிழலில் ஒதுங்கிய அனைவருக்குமானது ஆகும். அப்பொழுது என்னையும் சேர்த்துக் கேட்டார் என்பதே ஆகும் அல்லவா? 

இப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும். அவருடைய குடும்பத்தில், நானும் ஒருவன் என்று ராமானுஜரே ஒத்துக் கொள்ளவேண்டும் அல்லவா? அதை ஒத்துக் கொண்டு விட்டால் போதுமே. அதைச் செய்யாமல்தான் தள்ளிக் கொண்டே இருக்கிறோம். அவஸ்தையில் சிக்கிக் கொள்கிறோம். 

ஸ ஏவ, ஹி க்ஷேம: - தேவரீரின் ஸ்வபாவத்தைப் பார்த்தாலும், தேவரீர் என்னிடம் வைத்திரும் அபிமானத்தைப் பார்த்தாலும், தேவரீர் பெருமாளிடத்தில் பிரார்த்தித்ததைப் பார்த்தாலும், அது தான் க்ஷேமம் என்று தெரிந்தது. 

யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் - (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரின் திருவடியை ஆஶ்ரயித்தவர்களுக்கு / அடியார்களுக்கு அதுவே க்ஷேமமாகும்.

18 வது ஸ்லோகம் முற்றிற்று. 

காலத்ரயேSபி கரணத்ரயநிர்மிதாதி
பாபக்ரியஸ்ய ஶரணம் பகவத்க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேSர்த்திதாயத் 
க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம். 18.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக