ஞாயிறு, 11 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 204

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீராமனுடைய பிள்ளையான குசனுடைய வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீராமனுடைய பிள்ளையாகிய குசனுக்கு அதிதியென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை நிஷதன். அவன் பிள்ளை நபன். அவன் பிள்ளை புண்டரீகன். அவன் பிள்ளை க்ஷேமதன்வா. அவன் பிள்ளை தேவானீகன். அவன் பிள்ளை ஹீனன் (அனீஹனென்று சிலர்). அவன் பிள்ளை பாரியாத்ரன். அவன் பிள்ளை பலன். அவன் பிள்ளை சலன். அவன் பிள்ளை வஜ்ரநாபன். அவன் ஸூர்யனுடைய அம்சத்தினால் பிறந்தவன். அவன் பிள்ளை ககணன். அவன் பிள்ளை வித்ருதி. அவன் பிள்ளை ஹிரண்யநாபன். அவன் யோகாசார்யரான ஜைமினியின் சிஷ்யன். கௌஸல்யரான யாஜ்ஞ்யவல்க்ய ரிஷி, இந்த ஹிரண்யநாபனிடத்திலிருந்து யோகமென்று கூறப்படுவதும், பெரிய நன்மையை விளைப்பதும், அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்குவதுமான, அத்யாத்ம (ஆத்மா, பரமாத்மா பற்றிய) சாஸ்த்ரத்தைக் கற்றார். ஹிரண்யநாபன் பிள்ளை புஷ்யன். அவன் பிள்ளை த்ருவஸந்தி. அவன் பிள்ளை ஸுதர்சனன். அவன் பிள்ளை அக்னிவர்ணன். அவன் பிள்ளை சீக்ரன். அவன் பிள்ளை ம்ருத்து. அவன் யோகத்தினால் சரீரத்தை வென்றவன். அவன் கலாபக்ராமமென்னும் க்ராமத்திற்குச்சென்று, இன்னமும் இருக்கிறான். இவன் கலியுகத்தின் முடிவில் அழிந்துபோன ஸூர்ய வம்சத்தை மீளவும் பிள்ளை, பேரன் முதலிய பரம்பரையினால் தழைக்கும்படி நடத்தப்போகிறான். அவன் பிள்ளை ப்ரஸ்னு. அவன் பிள்ளை ஸந்தி. அவன் பிள்ளை – மர்ஷணன் (அமர்ஷணன் என்று சிலர்). அவன் பிள்ளை ஸுமஹான் (மஹஸ்வானென்று சிலர்). அவன் பிள்ளை விச்வஸாஹ்யன். அவன் பிள்ளை ப்ருஹத்பலன். அவன் யுத்தத்தில், உன் தந்தையாகிய அபிமன்யுவால், அடியுண்டு முடிந்தான். இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த இம்மன்னவர்கள் அனைவரும் கடந்தார்கள். இனிமேல் வரப்போகிற இக்ஷ்வாகு வம்சத்தரசர்களைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

ப்ருஹத்பலனுடைய பிள்ளை ப்ருஹதரணன். அவன் பிள்ளை உருக்ஷதன். அவன் பிள்ளை வத்ஸப்ரீதன். அவன் பிள்ளை ப்ரதிவ்யோமன். அவன் பிள்ளை பானு. அவன் பிள்ளை தேவாகன். அவன் ஸேனைக்கு ப்ரபுவாயிருப்பான். அவன் பிள்ளை ஸஹதேவன். அவன் பிள்ளை ப்ருஹதஸ்வன். அவன் வீரனாயிருப்பான். அவன் பிள்ளை பானுமான். அவன் பிள்ளை ரதீகாச்வன். அவன் பிள்ளை ஸுப்ரதீகன். அவன் பிள்ளை மருதேவன். அவன் பிள்ளை ஸுரக்ஷத்ரன். அவன் பிள்ளை ருக்ஷகன் (புஷ்கரனென்று சிலர்). அவன் பிள்ளை அந்தரிக்ஷன். அவன் பிள்ளை ஸுதப்தன். அவன் பிள்ளை அமித்ரஜித்து. அவன் பிள்ளை ப்ருஹத்வாஜி. அவன் பிள்ளை பர்ஹி. அவன் பிள்ளை தனஞ்சயன். அவன் பிள்ளை ரணஞ்சயன். அவன் பிள்ளை ஸ்ருஞ்சயன். அவன் பிள்ளை சாக்யன். அவன் பிள்ளை சுத்தோதன். அவன் பிள்ளை லாங்கலன். அவன் பிள்ளை ப்ரஸேனஜித்து. அவன் பிள்ளை க்ஷத்ரகன். அவன் பிள்ளை குணன். அவன் பிள்ளை ஸரதன். அவன் பிள்ளை ஸுமித்ரன். அவன் அந்த வம்சத்திற்குக் கடைசியாயிருப்பான். இந்த மன்னவர்கள், ப்ருஹத்பலனுடைய வம்சத்தில் பிறக்கப்போகிறார்கள். இந்த இக்ஷ்வாகு வம்சத்தரசர்களின் வம்சம், ஸுமித்ரனோடு முடியப்போகின்றது. கலியுகத்தில், அந்த ஸுமித்ரன் ராஜனாயிருந்தபின்பு, இந்த வம்சம் ஸந்ததியின்றி அப்படியே அழியப்போகின்றது.

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக