ஒரு தாய் தன் குழந்தை தவறு செய்யும் போது கோபப்பட்டுத் தண்டித்தாலும் அல்லது தள்ளி வைத்தாலும், அந்தக் குழந்தை வேறு யாரிடமும் செல்லாது. அழுதுகொண்டே மீண்டும் அந்தத் தாயின் கால்களையே பிடிக்கும்; அவளது கருணைப் பார்வையையே எதிர்பார்க்கும்.
அதேபோல், எனக்கு வரும் துன்பங்களை நீ போக்கினாலும் போக்காவிட்டாலும், உன்னைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை.
"தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை” - எனக்கு வரும் துயரங்களை நீ தடுக்காவிட்டாலும் பரவாயில்லை — உன் திருவடிகளைத் தவிர வேறு சரண் இல்லை என்று உறுதியாக இருக்கிறேன்.
"ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே அழுங்குழவி” - தாய் கோபித்து அடித்தாலும், ஒதுக்கினாலும் — அந்தக் குழந்தை அழுதபடி மீண்டும் அவளிடமே ஓடும். வேறு யாரிடமும் போகாது. ஏனென்றால் அன்பு இருக்கும் இடம் தெரியும் அதற்கு.
"அதுவே போன்றிருந்தேனே” - அந்தக் குழந்தையைப் போலவே நானும் உன்னிடமே — துயர் நீக்காவிட்டாலும், தண்டித்தாலும் — திரும்பி வருவேன். இதுவே என் நிலை என்கிறார் ஆழ்வார்.
கேரள மாநிலம் திருமிற்றுக்கோட்டில் எழுந்தருளியுள்ள உய்யவந்த பெருமாளை (விற்றுவக்கோட்டு அம்மான்) ஆழ்வார் "அம்மானே" என்று அழைக்கிறார்.
29-03-2026

கருத்துரையிடுக